top of page
vuzhavar vurimai iyakkam logo.jpg

உழவர் உரிமை இயக்கம்

கரியமங்கலம் சுங்கச்சாவடி ஊழியர் பவுன்குமாரின் அட்டூழியம்

சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது* என்ற கோரிக்கையை வைத்து பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் - செங்கம் *கரியமங்கலம் சுங்கச்சாவடி ஊழியர் பவுன்குமாரின் அட்டூழியம்*!


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் கடந்த 29 11 2025 சனிக்கிழமை மாலை 4.30மணி அளவில் உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் *திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பாம்பாடி ஏரியில் சட்ட விரோதமாக மண் திருடப்பட்டுள்ளதை ஆய்வு செய்துவிட்டு* திரும்பி வரும்போது கரியமங்கலம் சுங்கச்சாவடி ஊழியரான பவுன் குமார் என்பவர் வாகனத்தை மறித்து வெளிப்புற வழியில் செல்லக்கூடாது சுங்கம் கட்டி விட்டு தான் செல்ல வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனத்தை வீடியோ எடுத்ததோடு இல்லாமல் *உழவர் உரிமை இயக்க நிர்வாகிகளிடம் சுங்க சாவடி கட்டும் போது என்ன செய்தீர்கள்* அப்போது தடுத்து நிறுத்த வேண்டியது தானே என்று ஆணவத்தோடு பேசியுள்ளார். 


அதன் பின்னர் வாகனம் சுங்கச்சாவடியை  கடந்த பிறகு வண்டியின் பதிவு எண்ணை வைத்து சுங்க கட்டணத்தை எடுத்துள்ளார் இத்தகைய செயலை உழவர் உரிமை இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. அதனை தொடர்ந்து

நேற்று காலை 11 மணி அளவில் சுங்கச்சாவடி ஊழியரை கண்டித்து கேள்வி எழுப்ப திரண்ட உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள் சுங்கச்சாவடி உள்ளே செல்லும் வழியை தடுப்புகளை வைத்து *பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் வெளிப்புற வழியில் வாகனங்களை திருப்பி விடப்பட்டு* பிறகு அட்டூழியம் செய்த ஊழியர் பவுன்குமார் வந்து உரிய பதில் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து காத்திருந்தோம்.


அங்கு வடநாட்டை சார்ந்த சுங்கச்சாவடி தலைமை ஊழியர் சஞ்சித் அவர்கள் *அங்கு பணிபுரியும் தமிழக பெண்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி இந்தி மொழியில் திட்டியதை* அங்கிருந்த ஒரு உழவர் புரிந்துகொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். *எங்கள் வீட்டுப் பெண்களை தரக்குறைவாக பேசுவதற்கு அந்த நபருக்கு யார் அதிகாரம் அளித்தது*? *உடனடியாக அந்த வடநாட்டு நபரை சுங்க சாவடியில் இருந்து நீக்கி தமிழ் தெரிந்தவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்களை பணியமர்த்த* வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.


பிறகு பவுன் குமார் என்ற ஊழியர் வந்து இனி இந்த தவறு நடக்காது என்று மன்னிப்பு கேட்ட பிறகு உழவர் உரிமை இயக்கத்தைச் சார்ந்தவர்களே அந்த தடுப்புகளை எடுத்து வைத்துவிட்டு வாகனங்களை உள்ளே செல்ல வழி விட்டனர்.


உழவர் உரிமை இயக்கம் தொடர்ச்சியாக கரியமங்கலம் சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து போராடிவரும் நிலையில் இப்படி நடந்து கொள்வது ஆணவத்தின் உச்சம். *உடனடியாக நாங்கள் ஏற்கெனவே கொடுத்த பட்டியலில் உள்ள வாகனங்களுக்கு விலக்கு* அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.


*இறுதியாக தமிழ் மொழி பேச தெரியாத ஒரு நபர் கூட கரியமங்கலம் சுங்கச்சாவடியில் இருக்க கூடாது* என்ற கோரிக்கையை உழவர் உரிமை இயக்கம் கோரிக்கை வைக்கிறது!


உழவர்களாய் ஒன்றிணைவோம், உரிமையை மீட்போம்!


செய்தித் தொடர்பகம்:

உழவர் உரிமை இயக்கம்,

#803, திருவள்ளுவர் நகர்,

செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

☎️: 9787456964/9952976790

bottom of page