top of page

அதிகாரம் இருந்தும் அவகாசம் கேட்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்

அதிகாரம் இருந்தும் அவகாசம் கேட்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தானகவுண்டன் புதூர் கிராம பேருந்து நிறுத்தத்தில் பல வருடங்களாக தனியார் பேருந்துகள் எதுவும் நிறுத்துவதில்லை. இதற்காக உழவர் உரிமை இயக்கம் தொடர்ச்சியாக அரசு  அலுவலர்களுக்கு மனு அளித்த விவரங்கள் இதோ


1. 13.06.2025 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு தர்பகராஜ் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.


2. 27.07.2025 திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் இருந்து தனியார் பேருந்துகள் நிறுத்தி செல்ல வேண்டும் என்று ( நகல் எண்: 25529/அ2/2025) அரசாணை வழங்கினார்.


3. 02.08.2025 அன்று பாய்ச்சல் காவல் உதவி ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் வழங்கிய அரசாணையை இணைத்து இனிமேல் தனியார் பேருந்துகள் அனைத்தும் தானகவுண்டன் புதூர் கிராம பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் இல்லையென்றால் பேருந்தை சிறைபிடிப்போம் என்று மனு அளிக்கப்பட்டது.


4. 12.08.2025 அன்று சாலை ஆய்வாளர் அவர்கள் தனியார் பேருந்தை நிறுத்தி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பேருந்தை நிறுத்தி செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.


5. 28.08.2025 அன்று திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களை சந்தித்து தாங்கள் வழங்கிய அரசாணையை மதிக்காமல் தனியார் பேருந்துகள் எதுவும் நிற்பதில்லை உடனடியாக பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி தனியார் பேருந்துகள் பயன் நேரம் பட்டியல் கொடுத்தோம்.


6.  அதன் பிறகு சாலை ஆய்வாளர் தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் தனியார் பேருந்து முதலாளிகளும்  மற்றும் உழவர் உரிமை இயக்க தலைவர் மற்றும் நிர்வாகிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி இனிவரும் காலங்களில் தனியார் பேருந்துகள் தானகவுண்டன் புதூரில் நின்று செல்லும் என்ற வாக்குறுதி அளித்தார்கள் அதன் பிறகும்  பேருந்துகள் சரிவர நிற்பதில்லை 31/12/2025 புதன் கிழமை மறுபடியும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களை சந்தித்து பேசிய போது இன்னும் 10 நாட்களுக்குள் நான் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தார்.


உடனடியாக திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தனியார் பேருந்துகள் தானகவுண்டன் புதூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். 


நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மக்களை திரட்டி பேருந்தை அறவழியில் சிறை பிடிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலர் உடனடியாக இதற்கு தீர்வு காண்பார் என்று நம்புகிறோம்!


உழவர்களாய் ஒன்றினைவோம்...

bottom of page