
உழவர் உரிமை இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
தஞ்சைக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் நெல் சாகுபடி அதிகமாக செய்கின்றனர். கடந்த 12.12.2025 அன்று உழவர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் குண்டாஸ் விவசாயி திரு அருள் ஆறுமுகம் தலைமையில், மாநில மாவட்ட, ஒன்றிய ,கிளை நிர்வாகிகளுடன் சென்று சம்பா சாகுபடிக்கான அறுவடை தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று கடிதம் வழங்கி கோரிக்கை வைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறை அலுவலரும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வழிவகை செய்கிறோம் என்றார் ஆனால் இதுவரையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை.
குறிப்பாக செங்கம் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்துள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அதிக அளவில் நெல் அறுவடை நடந்து வருகின்றது விவசாயிகளுக்கு தனியார் கமிஷன் மண்டிகளில் போதுமான விலை கிடைக்காமல் வேதனையுடன் நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பா சாகுபடிக்கான அறுவடை முடிந்த பிறகு யாருடைய நெல் மூட்டைகளை வாங்குவதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப் போகிறார்கள்.
அரசு மதுபான கடைகளில் எந்த நாளில் எவ்வளவு வியாபாரம் ஆகம், எவ்வளவு இருப்பு வைக்க வேண்டும் என்று கணக்கு போடும் அரசாங்கம்.
எப்போது நெல் அறுவடை துவங்கும் எவ்வளவு ஹெக்டர் பரப்பளவில் நெல் சகுபடி செய்துள்ளார்கள், எப்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலங்களை திறந்தால் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும் என்று யோசித்து வேலை செய்ய சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு நேரமில்லையா?
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஆணையிடுமாறு உழவர் உரிமை இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
உழவர்களாய் ஒன்றிணைவோம், உரிமையை மீட்போம்!
செய்தித் தொடர்பகம்:
உழவர் உரிமை இயக்கம்
செல்பேசி- 9787456964/9952976790