
உழவர் உரிமை இயக்கம்
2026 ஆங்கில புத்தாண்டில் உழவர் உரிமை இயக்கத்தின் மூன்று கிளைகள் ஒரே நாளில் திறக்கப்பட்டது.

2026 ஆங்கில புத்தாண்டில் உழவர் உரிமை இயக்கத்தின் மூன்று கிளைகள் ஒரே நாளில் திறக்கப்பட்டது.
நேற்று 01/01/2026
நேரம்: காலை 10.30 மணி
கிளையின் பெயர்; நரடாப்பட்டு-செட்டித்தாங்கல்
கிளை எண்: 39
நேரம்: மதியம் 12 மணி
கிளையின் பெயர்; பக்கிரிபாளையம்-புதுப்பேட்டை
கிளை எண்: 37
நேரம்: மாலை 6 மணி
கிளையின் பெயர்; மேல் பெண்ணாத்தூர்-காந்திபுரம்
கிளை எண்: 33
ஆகிய மூன்று கிளைகளின் துவக்க விழா மிக எளிமையாக மற்றும் சிறப்பாக முடிந்தது.நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட ,ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
உழவர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் "குண்டாஸ் விவசாயி" திரு அருள் ஆறுமுகம் அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள
கிளையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த கிளை திறப்பு விழாவில் கீழ்கண்ட உறுதிமொழியை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.
உழவர் உரிமை இயக்கத்தின் உறுப்பினராகிய நான்..
இந்திய அரசியலமைப்பு சட்டம்
வழங்கியுள்ள உரிமையை பயன்படுத்தி...
என்னை போன்ற உழவர்களின் வாழ்க்கையை மேம்படுததவும்... உழவுத் தொழிலை மற்ற தொழில்களை விட உயர்ந்ததாக மாற்றவும்..
உழவர்களின் உரிமையை மீட்கவும்..
கட்சி, சாதி, மதம், ஆண் பெண் என்ற பாகுபாடுகளை கடந்து..
உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன்...
உழவர் உரிமை இயக்கத்தில் இனைந்து...
எந்த அச்சமுமின்றி உழவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பவும்..
போராடவும் தயங்க மாட்டேன் என்றும்..
வாரத்திற்கு ஒரு நாள்..
உழவர் உரிமை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும்...
உறுதிமொழி ஏற்கிறேன்!
என்று உறுதியேற்று நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
உழவர்களாய் ஒன்றிணைவோம், உரிமையை மீட்போம்!
செய்தித் தொடர்பகம்:
உழவர் உரிமை இயக்கம்
செல்பேசி- 9787456964/9952976790