top of page
vuzhavar vurimai iyakkam logo.jpg

உழவர் உரிமை இயக்கம்

திட்டமிட்டபடி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்

திட்டமிட்டபடி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்,

DRO தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி ,

மண் திருடர்களுக்காக நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொணடு வேலை செய்யும் அரசு அலுவலர்கள்.

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் திருடிய மண் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து

*வரும் ஞாயிறு (14-12-2025) அன்று *சுமார் 2000 நபர்களுடன்* திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ,மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்  நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உழவர் உரிமை இயக்கம்  வைத்த கோரிக்கை எவைக்கும் செவிசாய்க்காமல் மண் திருடர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் மாவட்ட வருவாய் அலுவலர், விவசாயிகளின் கோரிக்கையை சிறிது மதிக்காமல் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று பயமுறுத்தும் வகையில் ஆணையிடுவதற்காகவே இந்த அமைதி பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்திருக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்.  இதனை உழவர் உரிமை இயக்கம் வன்மையாக கண்டிப்பதோடு

திட்டமிட்டபடி வரும் ஞாயிறு (14-12-2025) அன்று *சுமார் 2000 நபர்களுடன்* திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்

*தலைமை*

*திரு.* *அ.வை.தங்கவேல்,*

*பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு மற்றும் மேல்மா சிப்காட்-3  திட்ட எதிர்ப்பு சட்டப் போராளி*

உழவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பொதுமக்கள் ,விவசாயிகள் ,சமூக ஆர்வலர்கள் , பத்திரிக்கை துறை நண்பர்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர்! வாரீர்!!.

எங்கள் ஊரில் எங்கள் இடத்தில் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்!!

உழவர்களாய் ஒன்றிணைவோம்,

உரிமையை மீட்போம்!

செய்தித் தொடர்பகம்:

உழவர் உரிமை இயக்கம்,

#803, திருவள்ளுவர் நகர்,

செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

☎️: 9787456964/9952976790

bottom of page