top of page
vuzhavar vurimai iyakkam logo.jpg

உழவர் உரிமை இயக்கம்

மண் திருடர்களுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை!

மண் திருடர்களுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை!


திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி ஏரியில் *பல ஆயிரம் டன் மண் திருடியவர்கள் மீதும் மலப்பம்பாடி ஏரிக்கரையில் (நீர்நிலை) சட்டத்துக்கு புறம்பாக சாலை அமைக்கும் வேலைக்கு மண் திருடியவர்கள்* மீதும் நடவடிக்கை எடுக்கவும் கிராமங்களில் உள்ள *கோயில்களை இடிக்க கூடாது* என்றும் பல மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறையினரை கண்டித்து *எங்கள் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்கிறது காவல்துறை*. அப்படி எனில் *காவல் கண்காணிப்பாளர் திரு.சுதாகர் IPS அவர்கள் மக்களின் கோரிக்கைக்கு* செவி சாய்க்காமல் *மண் திருடர்களுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறாரா*?. திரு. சுதாகர் IPS அவர்கள் இம்மி அளவு நேர்மையுடன் செயல்பட்டு இருந்தால் கூட ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் திரு.தர்பகராஜ் IAS அவர்களிடம் கொண்டு சென்று நீங்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த பிரச்சினை என்று செய்திருக்க முடியும். *ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வது மட்டும் தான் எங்கள் வேலை அந்த பிரச்சனையை தீர்க்க உரிய அலுவலர்களிடம் அழைத்து சென்று பேச வைக்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாதா என்ன திரு.சுதாகர் IPS அவர்களே*?

*மாவட்ட ஆட்சியர் திரு.தர்பகராஜ் அவர்களே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும், மனு கொடுத்தும், ஊடக செய்தி அனுப்பியும், தபால் அனுப்பியும், கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டும்*... இவ்வளவு நடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று செயல்படுவது நீங்களும் இந்த மண் திருடர்களுடன் கூட்டணி வைத்து செயல்படுகிறீர்கள் என்று தானே கூற முடியும்?.

*திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.தர்பகராஜ் IAS மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.சுதாகர் IPS ஆகிய இருவரும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மண் திருடர்களுடன் கூட்டணி வைத்து செயல்படுவது தெளிவாகிறது. அப்படி மண் திருடர்கள் தருவது தான் உங்களுக்கு வேண்டுமெனில் உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மண் திருடர்களிடமே வேலைக்கு சேர்த்துவிடலாமே*?. நீங்கள் செய்வது சட்ட விரோத செயல் மற்றும் மக்கள் விரோத செயல்! மக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளார்கள். மண் திருடர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்!

எங்கு போராட்டம் நடைபெற போகிறது என்று வீடு வீடாக சென்று விசாரிக்கும் காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக மாத கணக்கில் மண் திருடும்போது எங்கு சென்றீர்கள்?

*நீங்கள் மண் திருடர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வரை, மலப்பாம்பாடி ஏரி மற்றும் ஏரிக்கரையை மீட்டுறுவாக்கம் செய்யாதவரை உங்களின் இந்த செயலை கண்டித்து தினமும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்*!

உழவர்களாய் ஒன்றிணைவோம்,

உரிமையை மீட்போம்!

செய்தித் தொடர்பகம்:

உழவர் உரிமை இயக்கம்,

#803, திருவள்ளுவர் நகர்,

செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

☎️: 9787456964/9952976790

bottom of page