
உழவர் உரிமை இயக்கம்
மண் திருடர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறை

*மண் திருடர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை - விவசாயிகளை கைது* செய்கிறது. திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக்கு வன்மையாக கண்டனங்கள்!
மாத கணக்கில் மலப்பாம்பாடி ஏரியில் மண் திருடு நடைபெறுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பல புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அந்த *மண் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி* யாருக்கும் எந்த இடையூறும் இன்றி எங்களது எதிர்ப்பை தெரிவிக்க *எங்கள் கிராமத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினால் காவல்துறை கைது செய்கிறது*! இது தான் சட்டத்தின் ஆட்சியா?
*நாங்கள் வாழும் கிராமத்தில் நாங்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை* ஆனால் காவல்துறை அனுமதி இன்றி போராட அனுமதிக்க முடியாது என்று எங்களை கைது செய்கிறது. எந்த சட்ட அனுமதியுடன் ஏரியை அழித்து மண் திருடினார்கள்? காவல்துறை பதில் தறுமா? *அமைதியான முறையில் ஒன்று கூடும் உரிமை எங்களுக்கு உண்டு*. நாங்கள் நடத்தும் எந்த போராட்டத்திற்கும் பாதுகாப்பு கேட்டு தான் கடிதம் கொடுப்போம். காவல்துறை கைது செய்தது முற்றிலும் மக்கள் விரோத செயல்.
நாங்கள் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியிலோ அல்லது நகர்ப்புறங்களிலோ பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. எங்கள் உரிமையை எங்கள் கிராமத்தில் இருந்து கேட்கிறோம். இந்த நடவடிக்கையை எடுத்த கீழ்ப்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் திருமிகு.லட்சுமி அவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது.
காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராமச்சந்திரன் அவர்கள் வருவாய்த்துறை செய்ய வேண்டிய வேலையை நாங்கள் எப்படி செய்ய முடியும் என்கிறார். சாலையில் மண் கொண்டு செல்லும் எந்த வண்டியையும் காவல்துறை இதுவரை நிறுத்தி தனிக்கை செய்யவில்லையா? வருவாய்த் துறையையும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தான் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், ஏரி மண் திருட்டின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டால் இது வருவாய்த்துறை வேலை என்று சொல்லும் காவல்துறை, வருவாய் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் வரட்டும் அதை விடுத்து எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் எழாத நிலையில் ஏன் காவல்துறை வருகிறது?
ஆங்கிலேயர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு போராடி இருந்தால் சுதந்திரம் கிடைத்திருக்குமா? அனுமதி தான் கொடுத்திருப்பானா?. *மகாத்மா காந்தி எந்தவித அனுமதியும் இல்லாமல் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தினார் அதை அகிம்சை போராட்டம் என்று நாம் கொண்டாடுகிறோம்* ஆனால் அதே அகிம்சை வழியில் எங்கள் ஊரில் போராட எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு நாங்கள் எதற்கு அனுமதி வாங்க வேண்டும்?
நாளை முதல் அனைத்து கிராமங்களிலும் எங்களது சொந்த நிலங்களில் அகிம்சை வழியில் இந்த மண் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை உழவர் உரிமை இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது!
உழவர்களாய் ஒன்றிணைவோம், உரிமையை மீட்போம்!
செய்தித் தொடர்பகம்:
உழவர் உரிமை இயக்கம்,
#803, திருவள்ளுவர் நகர்,
செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.
: 9787456964/9952976790