top of page
vuzhavar vurimai iyakkam logo.jpg

உழவர் உரிமை இயக்கம்

கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது!!

மேல் செங்கம் புதூர் கிராமத்தில் கலை 11.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது! அதனைத் தொடர்ந்து அந்தனூர் கிராமத்தில் மதியம் 1 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது!!

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி ஏரியை சீரழித்து மண் திருடிய அருணாச்சலா ஆலை இட உரிமையாளர் மீதும்

மலப்பாம்பாடி ஏரிக்கரையில் தார் சாலை அமைக்க மண் திருடியவர்கள் மீதும்

மலப்பாம்பாடி ஏரிக்கரை மீது போடப்படும் தார் சாலையை உடனடியாக நிறுத்த வேண்டியும்

தனிநபர் பயன்பாட்டுக்காக சாலையை விரிவு படுத்த ஊருக்குள் இருக்கும் கோயிலை இடிக்க வருவதை நிறுத்தப்பட வேண்டும்

என்றும் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் அவர்கள் மீதான  13 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் என்று தீர்ப்பு விவசாயிகளுக்கு எதிரானது. நானும் டெல்டா காரன் என்று சொல்லும் மாண்புமிகு தமிழக முதல்வர்  திரு‌.மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து வழக்கை தள்ளுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தது. நாளையும் இதே போராட்டம் வேறு கிராமத்தில் தொடரும்.....

எங்கள் ஊரில் எங்கள் இடத்தில் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்!!

உழவர்களாய் ஒன்றிணைவோம்,

உரிமையை மீட்போம்!

செய்தித் தொடர்பகம்:

உழவர் உரிமை இயக்கம்,

#803, திருவள்ளுவர் நகர்,

செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

☎️: 9787456964/9952976790

bottom of page