
உழவர் உரிமை இயக்கம்
மலப்பாம்பாடி ஏரிக்கரையில் ஆர்ப்பாட்டம்

ஊடக செய்தி: *மலப்பாம்பாடி ஏரிக்கரையில் ஆர்ப்பாட்டம்*! சட்ட விரோதமாக ஏரியில் இருந்து மண் திருடி ஏரிக்கரையில் சாலை அமைப்பதை தடுக்க வேண்டியும் அருணாச்சலா ஆலை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள மண் ஏரியில் இருந்து திருடிய மண். அந்த மண் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட அருணாச்சலா ஆலை இடத்திற்கு அருகில் உள்ள மலப்பாம்பாடி ஏரியில் சட்ட விரோதமாக மண் திருடி ஏரிக்கரையில் சுமார் 25 அடி அகலத்திற்கும் 20 அடி உயரத்திற்கு கொட்டி சாலை அமைக்க பொது சொத்தை சீரழித்தும் பொது மக்கள் வரிப்பணத்தை வீணடித்தும் அருணாச்சலா ஆலைக்கு சாலை அமைக்க கூடாது என்று உடணடியாக அந்த வேலையை நிறுத்த வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஊர் பொதுமக்களும் செய்தியாளர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உழவர்களாய் ஒன்றிணைவோம், உரிமையை மீட்போம்!
செய்தித் தொடர்பகம்:
உழவர் உரிமை இயக்கம்,
#803, திருவள்ளுவர் நகர்,
செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.
: 9787456964/9952976790