top of page

Uzhavar Urimai Iyakkam

About Uzhavar Urimai Iyakkam

This is a space to welcome visitors to the site. Grab their attention with copy that clearly states what the site is about, and add an engaging image or video.

image 2
உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு

வெட்ட வெட்ட தழைக்கும் வாழை தான் உழவர் உரிமை இயக்கம்


எந்தனை பொய் வழக்குகள் போட்டாலும் - சிறையில் அடைத்தாலும் உழவர் உரிமை இயக்கம்  எதற்கும் அஞ்சாமல் உழவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் மற்றும் உழவர்களின் உரிமையை மீட்கவும் தொடர்ந்து குரல் எழுப்பும்! போராடும்!!


திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட  *மலப்பாம்பாடி ஏரியில் பல ஆயிரம் டன் மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல புகார்கள் தெரிவித்தோம் ஆனால் மண் திருடர்கள் மீது நடவடிக்கை  எடுக்காமல் உழவர் உரிமை இயக்க நிர்வாகிகளை பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தி* எங்களை முடக்க நினைத்து சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் 7 நாட்கள் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆன உடனே  ஏரி மண் திருட்டுக்கு எதிராக உறுதியோடு போராடி சிறைச்சென்று திரும்பிய  நிர்வாகிகளுக்கு உழவர் உரிமை இயக்கத்தில் புதிய நிர்வாகிகளாக  தேர்வு மற்றும் பதவி உயர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய  பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கம் தெற்கு ஒன்றியமாக செயல்பட்டு வந்த *திரு.ராமதாஸ் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் கிழக்கு மாவட்ட தலைவராகவும்* , செங்கம் மேற்கு ஒன்றிய  தலைவராக இருந்த *திரு செல்வம் அவர்கள் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட தலைவராகவும்*, நரடப்பட்டு கிளை தலைவராக இருந்த *திரு.கோவிந்தன் அவர்கள் செங்கம் தெற்கு ஒன்றிய தலைவராகவும்*, சந்தா நகர் கிளைச் செயலாளராக செயல்பட்டு வந்த *திரு.ராமமூர்த்தி அவர்கள் செங்கம் மேற்கு ஒன்றிய தலைவராகவும்*, மேல் செங்கம் கிழக்கு கிளை தலைவராக இருந்த *திரு மணிகண்டன் அவர்கள் வருவாய் துறை கண்காணிப்பு குழு தலைவராகவும்* அறிவிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.


மண் திருடர்களுக்கு ஆதரவாகவும் பொது மக்களுக்கும் எதிராகவும் செயல்படும்  திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கு நாங்கள் சொல்வது என்னவென்றால், இன்னும் ஆயிரம் ஆயிரம் தலைவர்களை உழவர் உரிமை இயக்கம் உருவாக்கும். இலட்சக்கணக்கான சட்ட அறிவு பெற்ற தலைவர்களை உருவாக்கும்! உழவர்களுக்கான உரிமைகளை தொடர்ந்து பேசும்!! எந்த அச்சுறுத்தலையும் சிறையையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் உழவர் உரிமை இயக்கம்!!!


அப்பட்டமாக 11 பொய் வழக்குகள் போட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு 68 நாட்களில் சிறைமீண்ட தலைவர் எங்கள் தலைவர்.  சட்ட விரோத செயல்களை துணிவுடன் எதிர்கொள்ள எங்களை தயார் படுத்தி உள்ளார். அவரை போல் ஆயிரக்கணக்கான தலைவர்களை உருவாக்குவோம்! ஆம் *வெட்ட வெட்ட தழைக்கும் வாழை தான் உழவர் உரிமை இயக்கம்*!


உழவர்களின் உரிமை குரல் ஓங்கி ஒலிக்கும்!!


உழவர்களாய் ஒன்றிணைவோம்,

உரிமையை மீட்போம்!

அதிகாரம் இருந்தும்
அவகாசம் கேட்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்
அதிகாரம் இருந்தும் அவகாசம் கேட்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்

அதிகாரம் இருந்தும்

அவகாசம் கேட்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தானகவுண்டன் புதூர் கிராம பேருந்து நிறுத்தத்தில் பல வருடங்களாக தனியார் பேருந்துகள் எதுவும் நிறுத்துவதில்லை. இதற்காக உழவர் உரிமை இயக்கம் தொடர்ச்சியாக அரசு  அலுவலர்களுக்கு மனு அளித்த விவரங்கள் இதோ


1. 13.06.2025 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு தர்பகராஜ் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.


2. 27.07.2025 திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் இருந்து தனியார் பேருந்துகள் நிறுத்தி செல்ல வேண்டும் என்று ( நகல் எண்: 25529/அ2/2025) அரசாணை வழங்கினார்.


3. 02.08.2025 அன்று பாய்ச்சல் காவல் உதவி ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் வழங்கிய அரசாணையை இணைத்து இனிமேல் தனியார் பேருந்துகள் அனைத்தும் தானகவுண்டன் புதூர் கிராம பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் இல்லையென்றால் பேருந்தை சிறைபிடிப்போம் என்று மனு அளிக்கப்பட்டது.


4. 12.08.2025 அன்று சாலை ஆய்வாளர் அவர்கள் தனியார் பேருந்தை நிறுத்தி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பேருந்தை நிறுத்தி செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.


5. 28.08.2025 அன்று திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களை சந்தித்து தாங்கள் வழங்கிய அரசாணையை மதிக்காமல் தனியார் பேருந்துகள் எதுவும் நிற்பதில்லை உடனடியாக பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி தனியார் பேருந்துகள் பயன் நேரம் பட்டியல் கொடுத்தோம்.


6.  அதன் பிறகு சாலை ஆய்வாளர் தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் தனியார் பேருந்து முதலாளிகளும்  மற்றும் உழவர் உரிமை இயக்க தலைவர் மற்றும் நிர்வாகிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி இனிவரும் காலங்களில் தனியார் பேருந்துகள் தானகவுண்டன் புதூரில் நின்று செல்லும் என்ற வாக்குறுதி அளித்தார்கள் அதன் பிறகும்  பேருந்துகள் சரிவர நிற்பதில்லை 31/12/2025 புதன் கிழமை மறுபடியும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களை சந்தித்து பேசிய போது இன்னும் 10 நாட்களுக்குள் நான் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தார்.


உடனடியாக திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தனியார் பேருந்துகள் தானகவுண்டன் புதூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். 


நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மக்களை திரட்டி பேருந்தை அறவழியில் சிறை பிடிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலர் உடனடியாக இதற்கு தீர்வு காண்பார் என்று நம்புகிறோம்!


உழவர்களாய் ஒன்றினைவோம்...

Our Activities

Testimonial

This is your Testimonial section paragraph. It’s a great place to tell users how much you value your customers and their feedback.

Alex Smith

Client Review

This is your Testimonial section paragraph. It’s a great place to tell users how much you value your customers and their feedback.

Drew Carlyle

Client Review

This is your Testimonial section paragraph. It’s a great place to tell users how much you value your customers and their feedback.

Charlie McMann

Client Review

bottom of page